அரியலூரில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 'பள்ளிக் கல்வித் துறையில் உள்ள காலி பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படும். இப்பணிகள் ஒரு மாதத்தில் தொடங்கும். 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் 11, 12 பள்ளி மாணவர்களுக்கு இன்டர்நெட் வசதியுடன் கம்யூட்டர் வசதி செய்து தரப்படும்' என்றார்.