பாகிஸ்தானில் ஜூலை 25-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதையொட்டி, நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் நடைபெறுகிறது. இந்த நிலையில், பெஷாவரில் நேற்றிரவு தேசிய அவாமி கட்சியின் பிரசார கூட்டம் நடைபெற்றது. அப்போது மனித வெடிகுண்டுத் தாக்குதல் நடைபெற்றது. அதில், 12 பேர் உயிரிந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.