கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வரும் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதி, ஜுங்கா, `96 உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். தெலுங்குப் படத்தில் சிரஞ்சீவி, அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்து வரும் நிலையில், சிவ கணேஷ் இயக்கும் 'அக்கடா' என்னும் கன்னடப் படத்திலும் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.