ரியல் மாட்ரிட் அணியிலிருந்து விலகிய ரொனால்டோ ரசிகர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், `எனது வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதற்கான காலகட்டம் வந்துவிட்டதாக நம்புகிறேன். அதனால்தான் இந்த மாற்றம். ரியல் மாட்ரிட் ரசிகர்களிடம் நான் கேட்டுக்கொள்வது ஒன்றைத்தான். எனது முடிவைப் புரிந்துகொள்ளுங்கள்’ என எழுதியுள்ளார்