ராகுல் காந்தி நேற்று டெல்லியில் இயக்குநர் பா.இரஞ்சித்தைச் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு தொடர்பாக ட்வீட் செய்துள்ள ராகுல், ‘நான் டெல்லியில் நேற்று இயக்குநர் இரஞ்சித் மற்றும் நடிகர் கலையரசனை சந்தித்தேன். நாங்கள் அரசியல், படங்கள் மற்றும் சமூகப் பிரச்னை குறித்துப் பேசினோம். இந்தச் சந்திப்பு மகிழ்ச்சியாக இருந்தது’ எனத் தெரிவித்துள்ளார்.