தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்கள் அனைவரும் நேற்று வெற்றிகரமாக மீட்கப்பட்டு வெளியில் கொண்டுவரப்பட்டனர். இந்த மகிழ்ச்சியைத் தாய்லாந்து மட்டுமல்லாது உலக நாடுகளே கொண்டாடி வருகின்றன. ஆனால், கடைசிவரை சிறுவர்களுடன் இருந்த ஆஸ்திரேலிய டாக்டருக்கு, தந்தை இறந்துவிட்டதாகச் செய்தி வந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.