உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் செயல்படும் துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலின் நடவடிக்கைக்கு முடிவுகட்டும் வகையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தார். உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகலை ராஜ்நாத் சிங்குக்குப் படித்து காட்டி, துணை நிலை ஆளுநரை கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தினார்.