காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அதில், `வரும் 2019-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க மீண்டும் வெற்றி பெற்றால், புதிய அரசியலமைப்பை எழுதி உருவாக்குவார்கள்; இந்து பாகிஸ்தானாக இந்தியா மாறிவிடும்' என்று பேசினார்.