`பேட்மேன்' படம் பார்த்து, `பேட்வுமன்' ஆக அவதாரம் எடுத்துள்ளனர் சண்டிகர் மாநிலத்தைச் சேர்ந்த ஜான்வி சிங் மற்றும் லாவண்யா ஜெயின். இவர்கள், குடிசைப் பகுதிகளில் வாழும் பெண்களுக்காக `ஸ்பாட் ஃபிரீ' என்ற சுகாதாரப் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர். மேலும், ரூ.2-க்கு சானிட்டரி நாப்கின்களைத் தயாரித்து விநியோகம் செய்து வருகிறார்கள்.