1997-ம் ஆண்டு ஜுலை 12-ம் தேதி பாகிஸ்தானில் பிறந்தார் மலாலா. பெண் கல்விக்காக இளம் வயதில் குரல் கொடுத்த இவரை தாலிபன் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் லண்டனில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்து மீண்டும் பெண் கல்விக்காகப் போராடினார். மிகச்சிறிய வயதில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்று அனைவரையும் வியக்க வைத்தார்.