உத்தரகாண்ட் மாநிலம் மோதிச்சூர் வனப்பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாக அச்சுறுத்தி வந்த சிறுத்தையை வனத்துறையினர் சுட்டுக் கொன்றனர். வனத்துறை அதிகாரி உட்பட 21 பேரை வேட்டையாடி ருசி பார்த்தது இந்தச் சிறுத்தை. இதை உயிருடன் பிடிக்க எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்ததை அடுத்து சிறுத்தையை வனத்துறையினர் சுட்டுக் கொன்றனர்.