காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது மதுராந்தகம் தொகுதி. இப்பகுதியில் தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைக்காக அதிகம் குரல் கொடுத்தவர் உக்கம்சந்த். தனது 17-வது வயதிலேயே அரசியலுக்கு வந்தவர். காங்கிரஸ், அ.தி.மு.க, மற்றும் தி.மு.க ஆகிய கட்சிகளில் இணைந்து செயலாற்றியுள்ளார். இந்த நிலையில், உடல் நலக்குறைவால் உக்கம்சந்த் நேற்றிரவு காலமானார்.