மத்திய அரசுக்கு இணக்கமாகச் செயல்படுவதாகத் தமிழக அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படும். இதற்கு அமைச்சர்கள் பதிலடி கொடுப்பதும் வழக்கம். தற்போது இது தொடர்பாகப் பேசியுள்ளவர் அமைச்சர் ஆர்.பி உதயகுமார். அவர், ‘மத்திய மாநில அரசுகள் தாய் பிள்ளை போன்ற உறவில் உள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.