சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், `நீட் விவகாரத்தில் நான் தமிழக மாணவர்கள் பக்கம்தான் இருக்கிறேன். மொழிபெயர்ப்பு மூலம் மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது. நீட் மொழிபெயர்ப்பு அதிகாரிகள் கவனமாக இருந்திருக்க வேண்டும். எனவே தவறு இழைத்த மொழிபெயர்ப்பாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும்' எனத் தெரிவித்தார்.