'ஜோடி', 'கிச்சன் சூப்பர் ஸ்டார்' உள்ளிட்ட ஷோக்களில் கலந்துகொண்டு டிவி ரசிகர்களைக் கலகலப்பூட்டியவர் நடிகர் சாய் சக்தி. இவருக்கு 2013-ம் ஆண்டு அனீஸ் ஃபாத்திமா என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணமான இரண்டே ஆண்டுகளில் கணவன், மனைவிக்கிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் வர, தற்போது மனைவியைப் பிரிந்துவிட்டதாகச் சொல்கிறார் சாய் சக்தி.