இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 268 ரன்கள் எடுத்துள்ளது. இதில் குல்தீப் யாதவ் அசத்தலாக பந்துவீசி 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக  பட்லர் 53 ரன்களும், ஸ்டோக்ஸ் 50 ரன்களும் எடுத்தனர். 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கவுள்ளது.