நியூசிலாந்து நாட்டில் விஞ்ஞானிகள் சிலர் மனித உடலில் 3-டி தொழில்நுட்பத்துடன்கூடிய கலர் எக்ஸ்-ரே எடுக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், அவர்கள் உலகின் முதல் கலர் எக்ஸ்-ரே எடுத்துள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் உடல் தொடர்பான கூடுதல் மற்றும் அதிக துல்லியமான தகவல்களைப் பெறலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.