திருப்பதியில் ஆகஸ்ட் 9 முதல் 17 -ம் தேதி வரை மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மலைப்பாதை வழியாகப் பக்தர்கள் செல்லவும் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பாபிஷேகம் 12 முதல் 16 வரை நடைபெறவிருப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.