திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில், ஆடித் திருவிழா வரும் ஜூலை 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம், வரும் 30-ம் தேதி பகல் 12.05 மணிக்கு நடைபெறுகிறது. திருவிழா நாள்களில் காலை, மதியம் மற்றும் இரவு என 3 நேரமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.