100 ரூபாய் நோட்டு வண்ணமயமாக உள்ளது. புதிய 100 ரூபாய் நோட்டின் மாதிரியை மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. புதிய 100 ரூபாய் நோட்டு இளம் ஊதா நிறத்தில் இருக்கும். ரூபாய் நோட்டின் பின்புறத்தில் குஜராத்தில் 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட உலகப் புகழ் பெற்ற ராணி படிக்கல் கிணற்றின் படம் இடம்பெற்றிருக்கும்.