வாட்ஸ்அப் மூலம் வதந்திகள் பரவுவதைத் தடுக்காவிட்டால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அந்நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது மத்திய அரசு. இது தொடர்பாக 2-வது முறையாக வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம்.