வாட்ஸ் அப் மூலம் பரவும் வதந்திகளைக் கட்டுக்குள் கொண்டு வர புதிய நடவடிக்கை ஒன்றை வாட்ஸ் அப் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. வாட்ஸ் அப் மூலம் பகிரப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள், டெக்ஸ்ட் மெசேஜ்கள் உள்ளிட்ட ஃபார்வர்டு மெசேஜ்களை 5க்கும் அதிகமான நபர்களுக்கு ஃபார்வர்டு செய்ய முடியாத படி சோதனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.