ஃபேஸ்புக் நிறுவனம் அதேனா என்ற செயற்கைக்கோள் ஒன்றைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இந்தச் செயற்கைக்கோள் மூலம் உலகில் இணைய வசதியில்லா பகுதிகளுக்கு எளிமையாக பிராட்பேண்ட் சேவையை வழங்க முடியும் எனக் கூறியுள்ளது.