ஜிமெயில் பயனர்களுக்கு வரும் மெசேஜ்களுக்கு தானாகப் பதிலளிக்கும் வகையில் ஏப்ரம் மாதம் புதிய அப்டேட் கூகுள் நிறுவனம் வழங்கியது. இந்தப் புதிய அப்டேட்டில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக இங்கிலாந்தில் வெளிவரும் எக்ஸ்பிரஸ் கோ.யூகே என்ற பத்திரிகையில் செய்திவெளியானது. இந்தக் குற்றச்சாட்டை கூகுள் நிறுவனம் மறுத்துள்ளது.