ஒற்றை விரலால் மலையைத் தூக்கி அற்புதம் செய்த கண்ணனைப் போற்ற, மலையைத் தூக்கிய நாளில் ஆண்டுதோறும் 'கோவர்த்தன விரதம்' அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த பெருமைமிகு விரதம் இன்று (23-07-18) கொண்டாடப்படுகிறது. இயற்கையின் சீற்றங்களிலிருந்து சகல ஜீவராசிகளையும் பாதுகாக்கும் இந்த விரதத்தை, `கோபத்ம விரதம்’ என்றும் போற்றுவர்.