ராமேஸ்வரம் கோயில் நவகிரக சந்நிதியில் பக்தர்கள் பாதுகாப்புடன் நெய் தீபம் ஏற்றும் வகையில் புதிய விளக்குகள் அமைக்கப்பட உள்ளன. இதற்கென பிரத்யேகமான பித்தளை விளக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி எள் எண்ணெய் தீபம் ஏற்றத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்று ஏற்பாடாக நவகிரக விளக்குகள் அமைக்கப்பட உள்ளன.