ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம் நேற்று மாலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெற  உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளைத் தர்கா ஹக்தர் பொது மகா சபை நிர்வாகிகள் செய்துள்ளனர்.