ஆடி மாத பௌர்ணமி தினமான இன்று ஹயக்ரீவ மூர்த்தி ஞானத்தின் வடிவாகத் தோன்றினார் என புராணங்கள் கூறுகின்றன. குதிரை முகமும், மனித உடலும் கொண்ட இந்த நாராயண மூர்த்தியின் வடிவம் அஞ்ஞானத்தை அழிக்கக் கூடியது.  அசுரர்களிடமிருந்து வேதங்களை மீட்டுவந்த பரிமுகரை இந்த நன்னாளில் வழிபட்டால், சகல கலைகளும் ஸித்திக்கும்; ஞானம் கைகூடும்.