உலகத்தின் முதல் ஜோதியான சூரியனை வழிபடும் நாள் இன்று.  நவக்கிரகங்களின் முதல்வன் என்றழைக்கப்படும் சூரியனை வணங்கினாலே மற்ற கிரகங்களை வணங்கிய பலன் கிடைக்குமாம். 'சூரிய ஒளியே ஆன்ம உயிரை  வளர்க்கும் திவ்ய அன்னம்' என்று வியாசர் குறிப்பிட்டுள்ளார். சூரிய வழிபாட்டு தினத்தை சூரிய நமஸ்காரத்தோடு துவங்குங்கள்.