பாகிஸ்தானில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசு, தெற்காசியப் பிராந்தியத்தில் வன்முறை மற்றும் தீவிரவாதம் இல்லா நிலையை நோக்கிக் கொண்டுசெல்லத் தேவையான ஆக்கபூர்வமான முயற்சிகளை எடுக்கும் என நம்புவதாக இந்தியா தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் தேர்தலில் இம்ரான் கானின் கட்சி 116 இடங்களில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.