இந்தோனேசியாவின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான லாம்பாக் தீவுப் பகுதியில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ள நிலநடுக்கத்தால் உயிரிழப்பு அதிகளவில் இருக்கும் என எதிர்ப்பாக்கப்படுகிறது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு காணப்படுகிறது. சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.