ஆதார் அடையாள அட்டை விவரங்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக டிராய் தலைவர் ஆர்.எஸ்.ஷர்மா தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக சவால் ஒன்றை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பதிவிட்ட சில நிமிடங்களிலேயே அவருடைய ஆதார் விவரங்களை பிரான்ஸ் சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ஒருவர் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.