மாஸ்கோ, வாஷிங்டன் நகரங்களைத் தொடர்ந்து தலைநகர் டெல்லியில் ஏவுகணை தாக்குதல் தடுப்பு அமைக்கப்பட உள்ளது. இதற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவிடம் இருந்து 1 பில்லியன் டாலர் செலவில் NASAMS-II அமைப்பை இந்தியா வாங்க இருக்கிறது.