ஃபேஸ்புக் நிறுவனத்தின் அங்கமான வாட்ஸ்அப் நிறுவனம், தனது ஆப் மூலமாக பணப்பரிமாற்றம் செய்யும் சேவையை அதிகாரபூர்வமாகத் தொடங்குவதற்கு இந்திய அரசின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. கடந்த சில மாதங்களாக சோதனைமுயற்சியாக வாட்ஸ்அப் மூலமாக தொடங்கப்பட்ட பணப்பரிமாற்ற சேவை ஒரு மில்லியன் பயனாளர்களிடையே வரவேற்பைப் பெற்றது.