விஜய் மல்லையா மீதான வங்கிக்கடன் மோசடி வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை இன்று நடைபெறவுள்ளது. இதில் ஆஜராவதற்காக வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்திற்கு மல்லையா வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விசாரணையின் முடிவில் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைப்பது குறித்து தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.