பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்க உள்ள இம்ரான் கானுக்கு பிரதமர் மோடி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  மேலும் பாகிஸ்தானில் ஜனநாயகம் ஆழமாக வேரூன்றும் என தாம் நம்புவதாகவும், இரு நாடுகள் இடையே அமைதி, வளர்ச்சி குறித்தும் இம்ரானிடம் பிரதமர் மோடி தெரிவித்ததாக வெளியுறவு துறை தகவல் தெரிவித்துள்ளது.