இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சதமடித்து அசத்தினார். இங்கிலாந்து 287 ரன்கள் சேர்ந்திருந்த நிலையில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 100 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்தநிலையில், கோலி சதமடித்து சரிவிலிருந்து மீட்டார். கோலியின் 22 வது டெஸ்ட் சதம் இது.