முதல் இன்னிங்ஸில் விராட் கோலியின் சதத்தால் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 274 ரன்கள் எடுத்து இங்கிலாந்தை விட 13 ரன்கள் பின்தங்கியுள்ளது. அதிகபட்சமாக கோலி 149 ரன்கள் எடுத்தார். குறிப்பாக கடைசி விக்கெட்டுக்கு உமேஷ் யாதவுடன் இணைந்து கோலி 57  ரன்கள் சேர்த்தார்.