ஆடிப்பெருக்கு விழாவை தமிழகம் முழுவதும் மக்கள் கொண்டாடி வரும் நிலையில், காவிரி கடலுடன் சங்கமிக்கும் இடமான காவிரிப் பூம்பட்டினத்தில் பெண்கள் காவிரித் தாய்க்கு படையலிட்டும், தீபாராதனை செய்தும் வணங்கினர். தங்களின் வாழ்வாதாரமாக உள்ள விவசாயத்துக்கு முக்கியமான காவிரி நீருக்கு நன்றி செலுத்தும் விதமாக இதைக் கொண்டாடினர்.