இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் அஷ்வின் மற்றும் இஷாந்த் ஷர்மா சிறப்பாகப் பந்துவீசி இங்கிலாந்து வீரர்களைத் திணறடித்து வருகின்றனர். மதிய உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்துள்ளது. இஷாந்த், அஷ்வின் தலா 3 விக்கெட்டுகள் எடுத்துள்ளனர்.