2019-ம் ஆண்டில் விண்வெளிக்குச் செல்லும் குழுவினர் பெயரை வெளியிட்டுள்ளது நாசா. இதில், இந்திய வம்சாவளி சுனிதா வில்லியம்ஸ் இடம் பெற்றுள்ளார். 2011-ம் ஆண்டிற்குபிறகு விண்வெளிக்குச் செல்லும் முதல் குழுவினர் இவர்கள். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் ஸ்பேஸ்கிராப்ட் ஒன்றை விண்வெளிக்கு அனுப்பும் முனைப்பில் நாசா இறங்கியுள்ளது.