ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 29-வது கலந்தாய்வுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மூலம் ஜி.எஸ்.டி. வரியைச் செலுத்துபவர்களுக்கு 20% திருப்பித் தரப்படும் என்றும் பீம், ரூபே ஆப் மூலமாக பணப்பரிமாற்றம் செய்பவர்களுக்கு அதிகபட்சம் 100 ரூபாய் வரை கேஷ்பேக் சலுகை தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.