உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் மகளிர் அரையிறுதி ஆட்டத்தில் பி.வி. சிந்து ஜப்பானின் அகனே யமகுச்சியுடன் மோதினார். 55 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் வென்ற பி.வி.சிந்து இறுதிப் போட்டிக்கு இரண்டாவது முறையாக முன்னேறியுள்ளார். இறுதிச்சுற்றில் ஸ்பெயினின் கரோலினா மரினை எதிர்கொள்ளவிருக்கிறார்.