கடந்த மாதம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகளில் 16 இலட்சம் வாக்குகள் செல்லாத வாக்குகள் என நிராகரிக்கப்பட்டுள்ளன. இது கடந்த தேர்தலை விடவும் அதிகம் எனவும் தெரிய வந்துள்ளது. பாகிஸ்தானின் மொத்த மக்கள்தொகையில் 10 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர்.