அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோயிலில் நேற்று ஆடிக்கிருத்திகை விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவுக்காக தமிழகம் முழுவதுமுள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்தனர். பக்தர்களுக்குப் போதிய வசதிகள் செய்யப்படவில்லை என்று பக்தர்கள் குற்றம்சாட்டினர்.