இந்தோனேசியா, லம்போக் தீவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுவரையிலும், 82 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆகப் பதிவாகியுள்ளது.