அமெரிக்க தேர்தலின்போது, தனது மகன் ரஷ்ய வழக்கறிஞரைச் சந்தித்துப் பேசியது உண்மைதான் என பகிரங்கமாக ஒப்புக்கொண்டார் அதிபர் ட்ரம்ப். `தேர்தலின் தங்களை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய தகவல்களைப் பெறுவது சட்டபூர்வமானதுதான். அரசியலில் இதுபோன்று நடைபெறுவது வழக்கம்' என ட்வீட் செய்துள்ளார் டொனால்டு ட்ரம்ப்.