அமெரிக்காவில் சீக்கியர் ஒருவர்மீது இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. `உங்களை நாங்கள் வரவேற்கவில்லை; உங்கள் நாட்டுக்குத் திரும்பிச் செல்லுங்கள்' என்று கூறி கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். கலிபோர்னியா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.