கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களுக்கு அகர வரிசையில் பெயரிட்டு வருகிறது. அதன்படி தற்போது பயன்பாட்டில் உள்ள ஆண்ட்ராய்டு 8 'ஓரியோ'-வுக்கு அடுத்த வெர்ஷனான ஆண்ட்ராய்டு 9 இயங்குதளத்துக்கு 'பை' என பெயரிட்டுள்ளது. தற்போது பிக்ஸல் மொபைலில் மட்டும் கிடைக்கும் இச்சேவை விரைவில் மற்ற மொபைல்களுக்கும் கிடைக்கவிருக்கிறது.