சென்னை எம்.ஓ.பி வைஷ்ணவா பெண்கள் கல்லூரி விழாவில் கலந்துரையாடிய இசையமைப்பாளர் இளையராஜா, ``நான் சுயசரிதை எழுதப்போவதில்லை. என்னுடைய இசையே எனக்கு சுயசரிதை. என் வாழ்க்கையிலிருந்து மற்றவர்கள் கற்றுக்கொள்ள எதுவும் இல்லை. சுய தம்பட்டம் எப்போதும் வரலாறு ஆகாது" எனக் கூறியுள்ளார்.